Post from Sri Ramana Sharma (Nerur)

நம்மூரில் மஹாமகம் இருப்பதால் போலும் பிரசித்தி அடையவில்லை புஷ்கரம். ஆனால் புராண ப்ரமாணங்கள் இதற்கும் இருப்பதாலும் லோகத்தில் தர்மங்கள் நாளுக்கு நாள் க்ஷீணித்துக்கொண்டு போவதாலும் இயன்றவரை எளிய தர்மங்களையாவது நடத்தவேண்டியிருப்பதாலும் ஶ்ரீ பெரியவாள் ஆந்த்ர தேசத்தில் வழக்கத்தில் உள்ள இதனை நாமும் செய்யலாமே என்று நமக்கு போதிக்கிறார்கள்.

மஹாமகம் குறிப்பிட்ட குளத்தில் குறிப்பிட்ட லக்னத்தில் தான் பலன் அளிக்கும். புஷ்கரமோ ப்ருஹஸ்பதி ஒரு ராசியில் ஸஞ்சரிக்கும் முதல் மற்றும் கடைசி 12+12=24 நாட்கள் முழுதும். தவிர இடைப்பட்ட நாட்களிலும் நடுப்பகலில். ஆகையால் இது மஹாமகத்தை விட அதிக புண்ய லாபம் தருகிறது எனலாம்.

இதையடுத்து இதன் ப்ரமாண வாக்யங்களைப் பதிவிடுகிறேன். இவை கடந்த வருடம் விஜயவாடா சாதுர்மாஸ்ய சமயத்தில் சேகரித்தவை.

நெரூர் ஶ்ரீரமண சர்மா.

Sri Sri Bala Periyava Speech on Cauvery Pushkaram

“Just like kumbabhishekam renews and re-energises the power of the temples, the pushkaram is meant to renew and replenish the power of the rivers where it occurs. ” thus explains Periyava becautifully the importance and origin of pushkaram in order that we understand it and reap benefits from it. 

He explains the ghats of importance for this pushkara snanam, and how we must perform. 
Please listen to this speech by Sri Sri Bala Periyava

Message from Sri Muthukumaraswamy – Secretary, Mayavarum Pushkaram Team

கங்கை தனது பாவத்தை போக்கிகொள்ள ஐப்பசி மாதம் முழுவதும் மாயூரத்தில் இருப்பதால் ,ஸ்ரீ காசிவிஸாலாட்சி சமேத,ஸ்ரீகாசி விஸ்வநாதர் கங்கையே மயிலாடுதுறை சென்ற பின் நாமும் மயிலாடுதுறையில் எழுந்தது அருளவேண்டும் என்று புறப்பட்டு இங்கே வந்ததால் தூலாகட்ட காவிரியில் இரு புறமும் 7 காசிவிஸ்வநாதர் அலயம் அமைந்துள்ளது ,இதில் நமக்கு ஆறு காசிவிஸ்வநாதர் ஆலயங்கள் நமக்கு தெரியும் 7 வது ஆலயத்தை தற்போது வசிப்பர்கள் யாருக்கும் தெரியாது எனெனில் முற்றிலும் ஆக்கிரிமிப்பினால் முற்றிலும் மறைக்கபட்டு இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது தற்போது காவிரி புஷ்கர கமிட்டியின் முலமாக ஆக்ரமிப்பாளரிடத்து பேச்சு வார்த்தை நடத்தி 12-07-14 அன்று மிக பழமையான ஆலயத்திற்கு திருப்பனி ஆரம்பிக்க பாலஸ்தாபனம் செய்யபட்டது அங்கே உள்ள லிங்கம் உளியால் செதுக்கபட்டது அல்ல என்றும்  நர்மதை நதிக்கரையில் நீரால் உருவாக்கப்பட்ட பான லிங்கம் என ஸ்தபதி கூறியதும் அதனுடைய கோபுரம் வட இந்திய ஆலய வழக்கத்தில் இருந்ததும்,பல நூறு ஆண்டுகள் திருப்பனி செய்த தடயம் இல்லாததாலும்,மேலும் இந்த ஆலயம் காசியில் ஹரிச்சந்திரா காட் என்ற இடத்தில் உள்ள ஆலயத்திற்கு இனையானது என்று சொல் கேட்டும்  அனைவருக்கும் ஆச்சரியம் இப்படி வரலாற்று சிறப்பு மிக்க ஆலய திருப்பனியை சென்னையை சேர்ந்த திருப்பனி செம்மல்.திருமதி,மகாலெட்சுமி சுப்பிரமணியன் அவர்கள்களின் ,மகாலெட்சுமி அறகட்டளை மூலமாக   திருப்பனியை துவங்கியுள்ளனர்  , உள்ளே சென்றோம் பார்த்து வியந்தோம் !ஆம் நேற்று செய்தது போல் ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் பிரகாசமாக நம்மை வரவேற்றது போல் இருந்தது ,”ஆழ்க தீயெதெல்லாம் அரண் நாமமே சூழ்க” என்றும் “சிவாயநம என்று சிந்திப்பவர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லையே என்று சொல்லி பாலஸ்தாபனம் செய்தோம் .மிகவும் மகிழ்சிகரமான நாளாக அன்று அமைந்தது .திருப்பனி வேலையும் உடனடியாக துவங்கியது வாருங்கள் உன்மை பேசிய ஹரிச்சந்திரருக்கு நல்வாழ்வு தந்த ஏழாவது காசிவிஸ்வநாதரை காவிரி கரையில் வழிபட அனைவரும் வாருங்கள் .       இங்கனம்                                

ச.முத்துகுமாரசாமி ,                

செயலாளர் ,

காவிரி புஷ்கரம் 2017 மயிலாடுதுறை .

Meeting at Thiruvaiyaru

A Note from the Cauvery Pushkaram  Trust Team – in Tamil.
 
சோழ மண்டல மெய்அன்பர்களுக்கு வணக்கம் அன்பான வேண்டுகோள் வருகின்ற ஹாலம்பி வருடம் ஆவணி மாதம் 27 ம் தேதி [12 / 09 / 2017 ] குரு பெயர்ச்சியை முன்னிட்டு முன்னிட்டு எதிர் வரும் 16 / 07 / 2017 ஞாற்று கிழமை மாலை 5 மணிக்கு திருவையாறு புஷ்பமண்டபத்தில் காவேரி புஷ்காரம் விழா கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் அனைவரும் கலந்துகொள்ளவேண்டுகிறோம் 
                                                இப்படிக்கு 
                                              தொடர்புக்கு                                                                                                                                        
                    திரு திலகர் திருவையாறு 9360670393                                                                                          
                    திரு செல்வக்கண்ணு 9443428614                                                                
                    திரு முருகன் தஞ்சாவூர் 9489317822                                                                          
                    திரு லெக்ஷ்மிநரசிம்மன் தஞ்சாவூர்    9367770296
 
Translation : A humble note to all the residents of Cauvery / Kaveri Basin.  This year, from Sep 12 – 24 it is declared to celebrate Cauvery Pushkaram. Regarding this a meeting is organized on 16 July at thiruvaiyaru Pushpamandapam . Requesting all to participate … 
For details please contact 
Sri Tilakar – – 9360670393, 
Sri SelvaKannu – 9443428614  
Sri Murugan – Tanjore :  9489317822
Sri Lakshmi Narasimhan – Tanjore : 9367770296